குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் !

0

எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே ! உங்களுக்கு கிடைக்க‌ போகும் ராஜயோகம் !

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான குரு பகவான் இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். தற்போது ஏற்படும் குரு பெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பதவி உயர்வுகள் கிடைக்கும். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசியையும், 3-ஆம் வீடு, 5-ஆம் வீடு ஆகிய பாவங்களையும் பார்வை செய்ய உள்ளதால் இறையருள் பெறும் நிலை, மதிப்பும் மரியாதையும் மேலேங்கும் நிலை, பெரிய மனிதர்கள் நட்பு போன்றவை கிடைக்கும், எடுக்கும் முயற்சியில் இருந்த தடைகள் விலகி சுபிட்சங்கள் உண்டாகும், பூர்வீக சொத்து ரீதியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிம்மதி உண்டாகும், பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்று எடுக்கும் யோகம் உண்டாகும். தந்தை வழியில் பொருளாதார ரீதியாக சாதகமான பலன் உண்டாகும். சர்ப கிரகமான ராகு 3-லும், கேது 9-லும் 23.09.2020 முடிய சஞ்சரிப்பதால் அனுகூலமான பயணங்களும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகள் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியால் நற்பலன் நடக்கும். தற்போது 9-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் 3-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குறைந்து மன நிம்மதி ஏற்படும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி பூரிப்பு உண்டாகும். சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய தைரியம் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

தனக்காரகன் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் லாபம் திருப்பதிகரமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இதுவரை இருந்த வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறமுடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் விடாமுயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும். பேச்சில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடித்தல் மேலும் பல முன்னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகம்

பணிபுரிவோருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்த கால அவபெயர்கள் விலகி உங்களது பெயர் புகழ் மேலோங்கும் காலமாக வருகின்ற நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் அனைத்து கட்சிகளிடமும் சுமூகமாக இருக்க முடியும். கட்சி பணிகளுக்காக வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நீர்வளமும், நிலவளமும், மிக சரியாக இருப்பதால் குறிப்பிட்ட பயிர்களை விவசாயம் செய்து லாபத்தை காண முடியும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பூமி மனை போன்றவற்றை வாங்கும் நோக்கம் நிறைவேறும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி நிம்மதியுடன் இருப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொன்பொருள் சேருவதுடன் நவீன பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். பணிபுரிபவர்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வுகள் கிடைத்து வேலைபளுவும் குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலை விலகி ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களும் கிடைக்கும். உடன் பழகுபவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் மேலும் உற்சாகத்தை அளிக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020

உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். பொன்பொருள் சேரும். கடன்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020

உங்கள் ராசிக்கு குரு பகவான் 9-ல் ஆட்சி பெற்று களத்திரகாரகன் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், நவீன பொருட்களை வாங்கும் அமைப்பு உண்டு. எடுக்கும் முயற்சிக்கு பரிபூரண வெற்றி ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். துர்கை அம்மனையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020

குரு பகவான் பாக்கிய ஸ்தானமாக 9-ல் பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சிறிது நெருக்கடி நிலவினாலும் உங்களுக்கு உள்ள போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் சிறிது தடைக்கு பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020

உங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக மகர ராசியில் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் சிறிது நெருக்கடி நிலவினாலும் ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். போட்டிகள் அதிகரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே நெருக்கடி தருவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி இருக்கும் என்றாலும் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சர்ப்பகிரகமான ராகு சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். நெருங்கியவர்கள் உதவியால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை செய்யும் போது நிதானம் தேவை.

கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். சர்ப கிரகமான ராகு 2-லும் கேது 8-லும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி இருவரும் விட்டு கொடுத்து செல்வது நல்லது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

சுப காரியங்கள் எளிதில் கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சிறிது நெருக்கடியுடன் நல்லது நடக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அரிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020

உங்கள் ராசிக்கு 9–ல் குரு பகவான் ஆட்சி பெற்று ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சஞ்சரிப்பதால் எதிலும் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது உத்தமம். 10-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். விநாயகர் வழிபடுவது நல்லது.

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு திருக்கணிதப்படி 24.01.2020 முதல் சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.
கேது 9-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,
நிறம் – ஆழ்சிவப்பு
கிழமை – செவ்வாய்
கல் – பவளம்
திசை – தெற்கு
தெய்வம் – முருகன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசி பலன் அக்டோபர் 13 முதல் 19 வரை – Vara Rasi Palan !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை – 14.10.2019