குருபெயர்ச்சி 2018 -2019: சிம்ம ராசியினரே உங்களுக்கு நடக்கப்போவது என்ன?

0
1388

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 8ஆம் இடம் 10 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 8 ஆம் இடம் வம்சாவழி சொத்துக்களையும் எதிர்பாராத செலவினங்களையும் தொல்லைகளையும் குரிப்பிடும். 1௦ ஆம் இடம் பதவி மற்றும் அந்தஸ்தை குறிப்பிடும். 12 ஆம் இடம் வீண் விரயங்களையும் பிரச்சினைகளையும் நஷ்டங்களையும் குறிக்கும்.

இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

தொழிலும் வியாபராமும்
இந்த காலக் கட்டத்தில் வீண் பழிகளை சுமக்க நேரலாம். கூடுதல் வேலைப் பளு தெரிகின்றது. கவனச் சிதறலால் தொழிலில் தவறுகள் ஏற்படலாம். அதனை தவிர்க்கவும். வியாபாரத்தில் உள்ளோர் வியாபார நடவடிக்கைகளை கை விட வேண்டாம். ஆனால் புதிய முயற்சிகளை மட்டும் சிறிது காலத்திற்கு ஒத்திப் போடலாம்.

குடும்பம்
குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். தாங்கள் தான் அதிகமாக பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். பிரதிபலனை எதிர்பார்க்க முடியாது. உறவுகளில் சிறு சிறு விஷயங்களால் விரிசல்கள் ஏற்பாடும். அதனை பொருட்படுத்த வேண்டாம்.

காதலும் திருமணமும்
திருமணம் தாமதமாகலாம். முக்கிய முடிவுகள் மேற்கொள்வதில் அவசரப்பட வேண்டாம். ஒவ்வொரு விஷயங்களையும் வாழ்க்கைத் துணையுடன் விவாதித்து பின் முடிவெடுக்கவும்.

ஆரோக்கியம்
சரியான உணவு முறையினால் நல்ல ஆரோக்கியம் பேணலாம். பெரும் ஆபத்து ஏதுமில்லை. தியானமும் உடற்பயிற்சியும் மிகவும் நல்லது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

கூடுதல் வேலைப்பளு

வீண் பழிகள் ஏற்படுதல்

கடனை திரும்ப செலுத்துவதில் சிரமம்

முன்னெச்சரிக்கை
முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம்.

பிரதிபலனை எதிர்பாராது கடமைகளைச் செய்யவும்.

பரிகாரம்
ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு ஹோமம் பண்ணவும்.

Previous articleஆகா! நான் இல்லைங்க சிவகார்த்திகேயன் தான்! நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா?
Next articleதிடுக்கிடும் தகவல்கள் அம்பலம் காதலனை மறக்க முடியாமல் தவித்ததால் குழந்தைகளை கொன்றேன்!