குருபெயர்ச்சி பலன்கள் 2018- 2019: மகர ராசியினரே உங்களுக்கு நன்மைகள் கிடைக்குமா?

0
1374

அன்பான மகர ராசிநேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 1௦ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 11 ஆம் இடத்திற்கு செல்கிறார்.குரு பகவான் 3 ஆம் இடம் 5 ஆம் இடம் மற்றும் 7 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 3 ஆம் இடம் சிறு தூரப் பிரயாணம், தகவல் தொடர்பு இவற்றை குறிக்கும். 5 ஆம் இடம் குழந்தைகள், ஊக வாணிபம், ஆன்மீக ஈடுபாடு இவற்றி குறிக்கும்.7 ஆம் இடம் திருமணபந்தம், வியாபார கூட்டாளிகளை குறிக்கும்.

தொழிலும் வியாபராமும்
தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய வேலை வாய்புகள் உருவாகும். குறித்த காலத்தில் பணிகளை முடிக்க முடியும். நிலுவைப் பணிகள் கணிசமாகக் குறையும். வியாபார முன்னேற்றம் காணலாம். புதிய சிந்தனைகளை அமல் படுத்த முடியும்.

பொருளாதாரம்
பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் காணலாம். செலவுகளை கணிசமாக குறைக்க முடியும். நெடு நாளைய முதலீடுகள் நற்பலன்களை கொடுக்கும். ஆன்மீக செலவுகள் காணப்படுகின்றது.

குடும்பம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தகவல் பரிமாற்றம் நல்ல முறையில் இருக்கும். குழந்தைகளுடன் குதூகலமுண்டு. சுற்றத்தாருடன் அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளும் போது நடுநிலையாக செயல்படவும்.

கல்வி
ஆர்வமான பிரிவில் அறிவு விருத்தி பெற முடியும். படிப்பில் கவனமுண்டு. நல்ல அக்கறை உண்டு. ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் சிறந்த முறையில் இருக்கும். எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் இன்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும். திட்டங்களை வகுத்து பாடங்களை படிப்பது நற்பலன்களை கொடுக்கும்.

காதலும் திருமணமும்
ஆவலும் ஆர்வமும் அதிகரிக்கக் கூடிய காலம் இது. சிறு சிக்கல்கள் இருந்தால் கூட அதை தீர்த்தால் தான் நிம்மதி என்று யத்தனிக்கும் காலமிது. திருமண உறவுகள் வலுப்படும். காதலர்களிடையே பரஸ்பர அன்பு உண்டு. திருமண வாய்ப்புகளும் வந்து சேரும்.

ஆரோக்கியம்
நல்ல ஆரோக்கியம் பராமரிக்க முடியும். ஊக்கமும் ஆக்கமும் மிகும். அழகு பரிமளிக்கும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே போதுமானது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

பதவி உயர்வு
பொருளாதார முன்னேற்றம்
சுமூக உறவு
குடும்பத்தில் குதூகலம்
நல்ல ஆரோக்கியம்.
திருமணம் கைகூடுதல்

பரிகாரம்
நற்பலன்கள் அதிகரிக்க வியாழக்கிழமைகளில் “ஓம் பிருகஸ்பதியே நமஹ” என்று 108 முறை ஜபிக்கவும்.

Previous articleவிநாயகர் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருப்பது எப்படி?
Next articleசெய்வினை காரணமாக தொழில் நஷ்டம்! செய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்!