கும்பம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

0
162

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை பெறுவீர்கள். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ஆஞ்சநேயரையும், முருகரையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-01-2023 இரவு 09.00 மணி முதல் 15-01-2023 காலை 06.48 மணி வரை.

Previous articleமீனம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!
Next articleமகரம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!