கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்க்குட்டி நைக்குடன்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் “கீதாஞ்சலி” மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக அந்த படம் ரிலீஸ் தாமதமாகி உள்ளது.
மேலும்,ஊரடங்கினால் வீட்டிலிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்க்குட்டியான நைக்குடன் ரொம்ப ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகிறார்.அவா் இன்ஸ்ரகிரைம் பக்கத்தில் நைக்குடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
By: Tamilpiththan