கிராமம் ஒன்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரங்கு! இலங்கையில் இப்படியொரு விசித்திரமா?

0
428

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றை குரங்கு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்பிட்டிய, கெடன்தொல, உடோவிட்ட பகுதியில் வாழும் ஒரு குரங்கிற்காக பிரதேச மக்கள் பயந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமகாலத்தில் அந்த பிரதேசத்தில் சுற்றித்திரியும் ஆபத்தான குரங்கினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த நாட்களில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் 20 பேருக்கு அதிகமானோரை குரங்கு கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குரங்கு தொடர்பில் வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸார் இதுவரை குரங்கினை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Previous articleரஜீவ் காந்தி கொலை குற்றவாளியான முருகன் பிறிதொரு வழக்கில் விடுதலை!
Next articleஐரோப்பாவில் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!