தமிழகத்தில் அபிராமியின் கணவர் அவள் ஒரு முறை கூட குழந்தைகளை அடித்ததே கிடையாது என்று கண்ணீர் மல்க காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.
சென்னையில் கள்ளக்காதலனுக்காக அபிராமி என்ற பெண் இரண்டு குழந்தைகளை கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குன்றத்தூர் காவல்நிலையத்திற்கு வந்த அபிராமியின் கணவர் விஜயிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அவர் தன் குழந்தைகளின் படிப்பிலிருந்து, அனைத்தையும் கவனித்துக் கொண்டது, அபிராமி தான், இதுவரை குழந்தைகளை தன் முன் ஒருமுறை கூட அடிக்காத அவள், குழந்தைகளை கொன்றிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அந்த காவல் நிலையத்தில் தனிமையில் இருந்த விஜய் வெகுநேரமாக தலை கவிழ்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.
குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டலும், தன் மனைவிக்காக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்த வாகனத்தில் தன் இரு குழந்தைகளின் பெயரை எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாகனம் வந்த பிறகே, அபிராமியின் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளது.
விஜய் அலுவலகம் சென்ற பிறகு, இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரை அபிராமி வலம் வருவாராம், அப்படித்தான் சுந்தரத்துடன் நெருக்கம் அதிகரித்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
அந்த பகுதியில் அபிராமியை மட்டுமே எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. தற்போதைய இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் விஜயின் பெயரே வெளியில் தெரிய வந்துள்ளது என்று கூறப்படுகிறது.




