நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. அந்த படத்திற்கு பிறகு அவர் லீலா என்கிற நெட்பிலிக்ஸ் வெப் சீரிஸில் நடித்துள்ளார். அது சென்ற மாதம் வெளியானது.
இந்நிலையில் தற்போது ஹுமா குரேஷி ஒரு ஹாட்டான போட்டோஷூட்நடத்தியுள்ளார். அதை கிச்சனில் தான் எடுத்துள்ளனர்.
அதில் ஒரு புகைப்படத்தில் செஃப் டேபிள் மீது ஷூ வைத்து இருப்பது போல க்ளிக் செய்துள்ளனர். அதை பார்த்து இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
செஃப் பணியாற்றும் டேபிளுக்கு மரியாதை கொடுங்கள், அந்த இடத்தில் சமைத்தால் நீங்கள் உண்பீர்களா எனவும் அவரை திட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.




