கார் வாங்கிய மகிழ்ச்சியில் விருந்து வழங்கிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

0
466

ஹட்டன் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மாடியிலிருந்து கீழே விழுந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதில் ஹட்டன் வில்பிரட் நகரைச் சேர்ந்த 26 வயதுடைய சம்பந்தன் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் நிலையில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதற்காக சக நண்பர்களுக்கு லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள ஹோட்டலில் விருந்து வழங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழந்ததாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleசீனாவின் சொர்க்க அரண்மனை கடலில் விழுந்து நொருங்கியது!!
Next articleஇலங்கையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய அமானுஷ்யம்! உண்மையாக நடந்த திகில் சம்பவம்!