காமெடி நடிகர் சந்தானம் மற்றும் அவரது மகளுடன் டப்மாஷ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லொள்ளூ சபா என்ற தனியார் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சந்தானம்.
இதையடுத்து, சந்தானத்தை தனது மன்மதன் படத்தின் மூலம் சிம்பு வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார். இப்படத்தைத் தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது வரை தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். ஆனால், இதுவரை குடும்பம் பற்றி எந்த புகைப்படமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் மகளுடன் இணைந்து செய்த டப்மாஷ் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா என்று அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இதில், பெரும்பாலும், சந்தானம் நடித்த படங்களின் காமெடிக்கு டப்மாஷ் செய்வது போன்று வீடியோ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




