இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தன்னை ஆபாச பட நடிகை போல் இருப்பதாகக் கூறி கணவர் துன்புறுத்துவதாக மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ். இவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவர் மீது ஞானபாரதி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் அவரது மனைவி.
அதில், தனது கணவரின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது எனவும், அவர் மாண்டியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை எனக்குத் தெரியாமல் திருமணம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி தன்னை ஆபாச பட நடிகை போல இருப்பதாகக் கூறி தொடர்ந்து சித்திரவதை செய்வதாகவும்,
அத்துடன், ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமை படுத்தியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்