தமிழ்நாட்டின் மதுரையில் காதல் திருமணம் செய்த தங்கையின் கணவரை அவரது அண்ணன் வீடு புகுந்து வெட்டியுள்ளார்.
மதுரையை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தனது உறவுக்கார பெண் மீனாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமண ஏற்பாடு செய்யப்பட்டது,
இதனிடையே, இரு வீட்டாருக்குமிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பொன்ராஜ்- மீனா ஆகியோரின் காதல் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இதனால் கோபம் கொண்ட மீனாவின் அண்ணன் பிரபு, எப்படி என் தங்கையை நீ திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆவேசத்துடன் கேட்டு பொன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைத் தடுக்க வந்த பொன்ராஜியின் தாயாரையும் பிரபு வெட்டியுள்ளார், பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.




