காதலர் தினம் ரோஜா புற்றுநோயோடு போராடி உயிர் பிழைத்த கதையை அவரே சொல்றார் கேளுங்க!

0
480

காதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. கடந்த வருடம் அவருக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. சோனாலி பிந்த்ரே அவருடைய மருத்துவ நிலை பற்றி தன்னுடைய விசிறிகளுக்கு தெரிவிக்க விரும்பினார்.

“இந்த நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை” என்று அவர் கூறினார். இவருக்கு மேட்டாஸ்டடிக் கான்சர் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க சிகிச்சை
நாடு முழுவதும் உள்ள புற்று நோயாளிகளுக்கு இவர் ஒரு உத்வேகமாக இருந்தார். சமூக ஊடகங்களில் இவருடைய நிலையைப் பற்றி அவ்வபோது செய்திகள் வெளியிட்டபடி இருந்தார். புற்று நோயை எதிர்த்து இவர் நடத்திய போராட்டத்தை மிக எளிமையாக மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார். இவருடைய வாழ்க்கை பலபேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது . இதானல் இவருடைய ரசிகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு எழுந்தது.

நேர்காணல்
ஹார்பர் பஜாருடன் இவருடைய சமீபத்திய நேர்காணலில், இவருடைய வாழ்க்கையைப் பற்றியும் புற்று நோயுடன் போராடியதைப் பற்றியும் முழுவதும் விவரித்தார். புற்று நோய் இருப்பது தெரிய வந்தவுடன் இவருடைய குடும்பத்தாரும், இவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இவருடைய அடிவயிறு முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி இவர் மேலும் விவரித்தார். இந்த பாதிப்பால் சோனாலி முழுவும் உடைந்து போனார்.

நொறுங்கிய இதயம்
“பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்ற ஸ்கேன் மூலம் இவருடைய அடிவயிற்றில் புற்றுநோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. தேவைதையின் ஒளி எல்லா இடங்களிலும் பரவுவது போல் புற்று நோய் அடிவயிறு முழுவதும் பரவி இருந்தது. இதனைப் போக்குவதற்கான முயற்சியில் 30% மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாக நியுயார்க் மருத்துவர்கள் தெரிவித்தபோது நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதயம் உடைந்து தூள் தூளானது” என்று சோனாலி கூறினார்.

என்ன நினைத்தார்!
புற்று நோய்க் கிருமியின் அதி தீவிர பரவலைப் பற்றி மருத்துவர்கள் தெரிவித்த போது, சோனாலி, உடைந்து போனார் என்றாலும், அவருடைய நம்பிக்கையை இழக்க வில்லை. “நோய்வாய்பட்டு நான் இறப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை” என்று சோனாலி கூறினார்.

எப்படி மீண்டார்
“ஆனால் இறப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த நோயால் நான் இறந்து விடுவேன் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறினார். இந்த சிகிச்சை முழுவதும் சோனாலியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பக்க பலமாய் இருந்து அவரை ஊக்குவித்து வந்தனர்.

“தற்போது நான் என் உடலின் அசைவுகளை கூர்மையாக கவனிக்கத் தொடங்கியுள்ளேன். இது ஒரு புதிய வழக்கம் மற்றும் புதிய பயணம்.” புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பெண்களுக்கு நான் கூற விரும்புவது, “நோயில் இருந்து முற்றிலும் மீண்டு வர தேவையானது, போதிய பராமரிப்பு மற்றும் ஆதரவு.

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து அவர்களின் முழு அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ளும் நேரம் இது” என்று அவர் கூறி முடித்தார்.

Previous articleஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க! எடை எப்படி குறையுதுனு பாருங்க!
Next articleதினமும் வேகமாக நடப்பதால் இந்த 7 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்!