காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும் என்ன தெரியுமா! தெரிஞ்சிக்கங்க!

0

காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்! இதோ தெரிஞ்சிக்கங்க!

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 தேதியை உலனம் முழுவதும் காதலர் தினமாக்க கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எப்போது பிப்ரவரி 14 வரும் அப்போது நம் காதலை சொல்லலாம் என்று நிறைய இளைஞர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டு என்ன டிரஸ் கலர் கோடு மற்றும் அதன் பொருளுக்காகவும் காத்திருப்பார்கள். அப்படி நீங்கள் எதிர்பார்த்த நிறங்களும் அதற்குரிய அர்த்தங்களும் வெளியாகியுள்ளன. அதுபற்றி கீழே விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது என்ன டிரஸ் போடலாம் என்று தான் பொதுவாக நமக்குக் குழப்பம் வரும். ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி வந்துவிட்டால் போதும், என்ன கலர் டிரஸ் போடலாம். என்ன கலர் டிரஸ் போட்டால் பிரச்சினை எதுவுமு் வராது. நமக்கு சாதகமாக இருக்கும். நம்முடைய காதலருக்கு டிரஸ் கலர் மூலம் என்ன செய்தி சொல்லலாம் என பல ஆலோசனைகள் நம்முடைய மனதுக்குள் நடக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் மிகவும் பொதுவானவையாகவும் மற்ற சில நிறங்கள் மாறி மாறியும் வரும். அப்படி இந்த வருடத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தங்களும் இணைய தளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, பிங்க், கருப்பு, மஞ்சள், பிரௌன், கிரே ஆகியவை இந்த ஆண்டுக்கு உரிய நிறங்கள் ஆகும். இதற்கான அர்த்தங்கள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

நீல நிறம் (blue color) காதலர் தினத்தன்று யார் நீலநிற (blue color) உடை அணிந்திருக்கிறார்களோ அது அவர்கள் ஃபீரியாகத்தான் இருக்கிறார்கள். எந்த கமிட்மெண்ட்டும் இல்லை என்பதற்கான அடையாளம். நீல நிறம் சிங்கிள் என்பதை தெரிவிக்கும் குறியீடாக இருக்கிறது. இவர்கள் நான் மிகவும் சுதந்திரமான இருக்கிறேன். அன்பான ஒரு உறவுக்குள் கமிட் ஆக நினைக்கிறேன். அன்பானவர்களை வரவேற்கிறேன் என்ற செய்தியை இந்த உலகத்துக்குத் தெரிவிக்கிறார்கள். வெல்கம் டூ அப்ளை என்பது தான் இதன் அர்த்தம்.

பச்சை நிறம் (green color) பச்சை நிறத்தைப் பொருத்தவரையில் ஒருவர் புரபோசல் டே அன்றோ மற்ற நாளிலோ தன்னுடைய க்ரஸிடம் காதலை சொல்லி, அவர்களுடைய முடிவுக்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அவர்களுக்கான முடிவு தான் இது. உன்னுடைய காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக பச்சை நிற ஆடை அணிவார்கள். பச்சை நிற ஆடையை வைத்தே காதலில் கமிட்மெண்ட்டில் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஆரஞ்சு நிறம் (orange color) இயற்பியல் தத்துவத்தின்படி, ஆரஞ்சு கலர் என்பது சிவப்பு நிறத்துக்கும் மஞ்சள் நிறத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். எப்போதும் ஜாலியாக பொழுதுபோக்கும் மனநிலையைக் கொடுப்பது தான் ஆரஞ்சு நிறம். காதலர் தினத்தன்னு ஆரஞ்சு நிற டிரஸ் அணிந்தால் அது அவர்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரிடம் தன்னுடைய காதலைச் சொல்லப் போகிறார் என்று அர்த்தம். அன்றைக்கு அவர்கள் குதூகலத்தில் துள்ளுவார்கள்.

பிங்க் நிறம் (Pink color) பிங்க் நிறம் என்பது மிக வெளிரிய ஒரு சிவப்பு நிறத்தில் இருந்து தோன்றுவது தான். இந்த நிறம் பொதுவாக துறுதுறுவென, அன்பான, பெண்மையை வெளிப்படுத்துவதாக, ரொமாண்டிக்கான ஒரு கலர். இந்த பிங்க் கலர் டிரஸ்ஸை காதலர் தினத்தன்று அணிந்தால் அது தன்னிடம் காதலைச் சொன்னவரின் காதலை இப்போது தான் ஏற்றுக் கொண்டேன் என்பதாக அர்த்தம். அவர் என் பதிலுக்காக காத்திருக்கிறார் என்று அர்த்தம்.

கருப்பு நிறம் (black color) கருப்பு நிறம் என்பது மனச்சோர்வு மற்றும் சுாகத்தினுடைய வெளிப்பாடு. இது மிகவும் மோசமானது. வன்முறை மற்றும் மோசமான முடிவு ஆகிய பொருள்களைத் தரக்கூடியது. அதனால் தான் துக்க நாட்களில் கருப்பு நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். காதலர் தினத்தன்னு ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தால் அது அவருடைய காதல் புரபோசல் அவர் விரும்பும் நபரால் நிராகரிக்கப்பட்டது (ரிஜக்ட்) என்று அர்த்தம். நிராகரிப்புக்கான காரணம் உன்பது ஒவ்வொரு நபருக்கும் சூழலுக்கும் ஏற்றபடி மாறும்.

வெள்ளை நிறம் (white color) வெள்ளை நிறத்தை நிறமி வண்ணம் என்று சொல்வார்கள். இதில் எந்த கலரைச் சேர்த்தாலும் அந்த வெள்ளையும் அதனோடு சேர்க்கப்பட்ட நிறமாகவே மாறிவிடும். பொதுவாக வெள்ளை நிறம் என்பது அமைதியை வெளிப்படுத்துதல், தூய்மை, நேர்மை ஆகியவற்றை உணர்த்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. வெள்ளை நிற ஆடையை ஒருவர் காதலர் தினத்தன்று அணிந்தால் அவர் ஏற்கனவே கமிட்மெண்ட்டில் இருக்கிறார். மற்ற யாருடைய புரபோசலையும் ஏற்க முடியாது என்பதை சொல்லக் கூடியதாக இந்த வெ்ளளை நிறம் இருக்கிறது.

சிவப்பு நிறம் (red color) சிவப்பு நிறம் என்பது பேரார்வத்தைக் குறிக்கக்கூடிய நிறமாக இருக்கிறது. காதலர் தினத்தன்று ஒருவர் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தால் நிச்சயம் நீங்கள் அவரைப் பார்த்து பொறாமை தான் பட வேண்டும். ஏன் தெரியுமா? அந்த நிறத்தின் பொருளே அவர் ஒரு ரொமாண்டிக்கான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். தன்னுடைய காதல் இணையுடன் ஜாலியான சுவாரஸ்யமான காதலை செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

மஞ்சள் நிறம் (yellow color) ஆரஞ்சு நிறத்தையும் பச்சை நிறத்தையும் ஒன்றாகச் சேர்த்தீர்கள் என்றால் உங்களுக்கு மஞ்சள் நிறம் கிடைக்கும். பொதுவாக மஞ்சள் நிறம் பொறாமை, தூய்மையின்மை, உண்மையின்மை ஆகியவற்றின் குறியீடாக விளங்குகிறது. அதனால் காதலர் தினத்தன்று யாரேனும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தால் அது அவர்களிடம் தூய்மையாக இல்லாத தன்னுடைய காதலை முறித்துக் கொண்டதை வெளிப்படுத்துவதன் அறிகுறியாகும். அதாவது அவர் பிரேக்-அப் ஆனவர் என்று பொருள்.

பிரௌன் கலர் (brown color) இரண்டு கலர்களுக்கும் மேல் மூன்றாவதான ஒரு கலர் சேர்ந்தால் அது பிரௌனாக மாறிவிடும். இது பல விஷயங்கள் கலந்திருப்பதை உணர்த்துகிறது. இந்த நிற ஆடையை அணிந்திருந்தால், எதிர்பாராத விதமாக இவர் ஒருவரிடம் கொடுத்த பிரபோசல் ரிஜக்ட் செய்யப்பட்டு விட்டது. என்னுடைய இதயம் உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

கிரே கலர் (grey color) கிரே கலர் நடுநிலைமையை உணர்த்தக்கூடியது. ஆனால் காதலர் தினத்தன்று கிரே கலர் டிரஸ் அணிந்திருந்தால் காதலில் அந்த நபருக்குப் பெரிதாக ஆர்வமோ விருப்பமோ இல்லை என்று அர்த்தம். என்ன பாஸ்! இந்த வருடமாவது காதலர் தினத்தன்று உங்களுக்கும் உங்களுடைய காதல் ஸ்டேட்டஸ்க்கும் ஏற்ற கலர் எது என்று தெளிவாகப் புரிந்து கொண்டு டிரஸ் தேர்வு செய்து அணியுங்கள். ஏன்னா அதுல உங்க வாழ்க்கை மட்டுமில்ல, மத்தவங்க வாழ்க்கையும்ல்ல சேர்ந்து இருக்கு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும்! அந்த நாட்கள் இவைதான்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 09.02.2019 சனிக்கிழமை !