நேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவினை காதலிப்பதாக கூறிவருகிறார்.
மேலும் அவர் இன்று பேசிய அவர் தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என கூறினார்.
“என்னை விட உயரமாக இருக்கனும், சமைக்க தெரியணும் – எனக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும், வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்துடுறேன் – துணி அவர் தான் துவைக்கனும், மாதம் ஒரு 50 ஆயிரம் சம்பாதித்தால் போதும்” என கூறினார் அபிராமி.
பின்னர் கவின் ஆல்ரெடி ரிஜக்டட் எனவும் அவர் தெரிவித்தார். அனைவர் முன்பு இப்படி கூறினாலும் கவினை கவர சில விஷயங்களையும் செய்து வருகிறார் அபிராமி.