கவினுடன் காதலா? நள்ளிரவில் இதுதான் நடந்தது! அனைவரின் முன்னிலையில் லொஸ்லியா !

0
373

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரு வாரங்களாக கவின் மற்றும் சாக்‌ஷி காதல் பிரச்சனை தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினம் தினம் பிரச்சனை அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை.

இந்நிலையில், நேற்றைய எபிஷோடில் கவின் சாக்‌ஷி என்னை நாமினேட் செய்தது மிகவும் கஷ்டமாக இருந்தது என கூறினார்.

அதன்பின்பு, சாக்‌ஷி பிரச்சனை குறித்து பேசும் போது கவின் என்னுடன் சரியாக பேசவில்லை, கடந்த வாரம் கமல் சார் எபிஷோடிற்கு பிறகு கவின் மொத்தமாக என்னைவிட்டு விலகிவிட்டார், அதேநேரம் வேற ஒரு பெண்ணுடன் மிகவும் ஜாலியாகவும், சந்தோஷமாகவும் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்.

இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏதோ நான் காதல் பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போதெல்லாம் என் கண் முன்பே இன்னொரு பெண்ணுடன் அவர் சந்தோஷமாக இருப்பது எனக்கு உண்மையாகவே கஷ்டமாகத்தான் இருக்கும்.

நானும் சாதரணமான பெண் தானே, இதுமட்டுமல்லாது, இரவு 4 மணி நேரம் 5 மணி நேரம் அந்த பெண்ணுடன் அவர் உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். என் உணர்வுகள் மீது சிறிதாவது மரியாதை வைக்க வேண்டாமா..?

நான் அந்த விடயத்திலிருந்து வெளிவர சிறிது நாள் ஆகும், ஒருவாரமாவது டைம் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, என் உணர்வுகளை மேலும் மேலும் சிதைத்துக் கொண்டிருந்தார்.

அதனால் தான் நான் நாமினேட் செய்தேன். இதுவே க்ளோஸ் நாமினேஷனாக இருந்திருந்தால் இவ்வாறு செய்திருக்கமாட்டேன். ஓபன் நமினேஷனாக இருந்ததால் மட்டும் தான் நான் நாமினேட் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாக்‌ஷி பேசி முடித்தவுடனே, எழுந்த லொஸ்லியா நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறினார்.

அவர் கூறியதாவது, எனக்கும் கவினுக்கும், இருக்கும் உறவு என்னவென்று எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இதை தனி தனியாக யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அவன் இந்த வாரம் நாமினேட் ஆகியிருந்தான். அவன் வெளியே போயிடுவானோ என்று தான் நாங்கள் இருவரும் இரவு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவன் கஷ்டத்தை என்னிடம் ஒரு நண்பனாக தான் அவன் கூறிக் கொண்டிருந்தான் அவ்வளவு தான்.

வேற எதுவும் இல்லை, மேலும் அவன் என் கையை பிடித்து பேசியது, எனக்கு என்னுடைய லிமிட் தெரியும் எப்படி பழக வேண்டும் என்பது எனக்கு தெரியும் நாங்கள் நண்பர்களாக தான் பேசிக்கொண்டிருந்தோமே தவிர வேறு எதுவுமில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது, நான் உங்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறவில்லை நீங்கள் ஏன் இப்போது இப்படி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என சாக்‌ஷி கேள்வி எழுப்ப, உடனே கோபமடைந்த லொஸ்லியா நான் உங்களிடம் தனியாக கூற இஷ்டம் இல்லை, அதனால் தான் இப்போது கூறுகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Previous articleதண்ணீரில் படு கவர்ச்சியாக பிக்பாஸ் புகழ் மீராமிதுன் எடுத்த போட்டோ ஷுட் !
Next articleநடிகர் விஷால் கைதாகிறார்? ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!