கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கொன்று புதைத்த காதலன்!

0
434

தமிழ்நாட்டில் உள்ள வேலூர் அருகே வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் ஆற்றங்கரையில் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் பசுபதி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 32 வயதான இவர் நாச்சியார்குப்பத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கள்ளக்காதல்
கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான டெய்லர் சதீஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தனிமையில் தவித்த சுதாவுக்கு சதீஷ் உடனான பழக்கம் சந்தோஷத்தை தந்துள்ளது. இதனால் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் பல்வேறு இடங்களில் அடிக்கடி சுற்றித்திரிந்து வந்தனர். சுதாவும் சதீஷும் வீட்டில் அடிக்கடி உல்லாசமாக இருந்ததோடு இருவரும் கணவன், மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

திருமணம் செய்ய முடிவு
சுதாவும், சதீஷும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் சதீஷ் நேற்றிரவு சுதாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

மேலும் ஒரு தொடர்பு
அப்போது வீட்டில் சுதாவும் வேறு ஒரு நபரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பார்த்த சதீஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் சதீஷ் வருவதை கண்ட சுதாவும், உல்லாசமாக இருந்த அந்த நபரும் ஒன்றுமே நடக்காதது போல் நடித்தனர். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வாக்குவாதம்
தனது கண்களால் கண்டதை நம்ப முடியாமல் கடும் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், ‘என்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் எப்படி நீ உல்லாசமாக இருந்தாய்’ என்று சுதாவிடம் தட்டிக்கேட்டார். மேலும் தகாத வார்த்தைகளாலும் சுதாவை திட்டியுள்ளார் சதீஷ். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடந்த தகராறில் அதிகாலை 2 மணிளவில் இருவரும் சமாதானமடைந்துள்ளனர்.

கொலை
காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசையுடன் இருந்த சதீஷ்க்கு சுதா செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார் சதீஷ். அதன்படி கள்ளக்காதலி சுதாவிடம் நைசாக பேசி சற்று இதமாக காற்றாடலாம் என அங்குள்ள ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச்சென்று தனிமையில் 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். உள்மனதில் துரோகத்தின் காயத்தால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், உல்லாசம் அனுபவித்ததோடு அங்கிருந்த கல்லை தூக்கிப்போட்டு சுதாவை துடிக்க துடிக்க கொன்றார்.

இதனையடுத்து சடலத்தை ஆற்றங்கரையிலேயே குழி தோண்டி புதைத்தார் சதீஷ். பின்னர் நேற்று காலை சதீஷ் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலியை கொலை செய்து ஆற்றில் புதைத்துவிட்டேன் எனக்கூறி சரண் அடைந்தார்.

Previous articleஆளுநரிடம் இருந்து அற்புதம்மாளுக்கு கிடைத்த முக்கிய செய்தி! பேரறிவாளனின் விடுதலை விவகாரம்!
Next articleவிஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?