கல்லூரி மாணவி கொலை! கள்ளக்காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!

0

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பிரகதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மத்திய சிறையில் சதீஷ்குமார் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. விவசாயி. இவரது மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பைனான்சியர் நாட்டுத்துரை (25) என்பவருக்கும் வருகிற ஜூன் 13-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்காக ஜவுளி வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரகதி கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்டார்.

அப்போது, பெற்றோருக்கும் போன் செய்து பல்லடம் அருகில் வந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இரவாகியும் பிரகதி வீடு திரும்பவில்லை. இதனால், ஒட்டன்சத்திரம் போலீசிலும் கோவை காட்டூர் போலீசிலும் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி ரோட்டோரத்தில் அரை நிர்வாண நிலையில் பிரகதி உடலை பொலிசார் சில தினங்களுக்கு முன்பு மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்டு பலாத்காரம் செய்து பிரகதி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. 5 தனிப்படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். மாணவியின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் அவரது உறவினரான ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ் (30) அவரிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.

இதனையமுடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது மாமன் மகள்தான் பிரகதி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரகதியை திருமணம் செய்து கொடுக்குமாறு என் மாமா குடும்பத்தாரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் பெண் தர மறுத்து விட்டனர். இதனால், கனிமொழி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு, ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இருந்தாலும் உறவினர் என்ற முறையில் பிரகதியுடன் பழகி வந்தேன்.

வழக்கம்போல பிரகதியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தேன். அப்போது, எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. திருமணத்திற்கு நீ 10 பவுன் நகையை கொடு. அதன் பின்னரும் 2 பேரும் அடிக்கடி சந்தித்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு எனக்கு உடன்பாடில்லை. நமக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என முடிவு எடுத்தேன். அதில் ஆத்திரமடைந்து பிரகதியை குத்தியால் குத்தி கொலை செய்தேன் என்றார். பிறகு பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி ரோட்டோரத்தில் வீசி சென்றதாக கூறினார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மத்திய சிறையில் சதீஷ்குமார் அடைக்கப்பட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமிதுனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !
Next articleஉனது மனைவி உயிரோடு இருக்கும் வரை! விமானத்தில் பறந்து வந்து அவளை கொலை செய்தது எதற்காக! கணவர் வாக்குமூலம்!