தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவியை காதலிக்கும் படி கட்டயாப்படுத்தியதால் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மாணவி கல்லூரியில் 3ம் ஆண்டு பிசிஏ பயின்று வருகிறார். அதே பாடப்பரிவில் 2ம் ஆண்டும் பயிலும் ரவிக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு மாணவியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மாணவியை தகாத வார்த்தைகளால் மிரட்டியதால் மாணவி மனம் உடைந்து கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
படுகாயமடைந்த மாணவிக்கு தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரவிக்குமாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




