Home thatstamil one india tamil oneindia tamil கர்ப்பிணி அம்ருதா ஆவேசம்! அழகான வாழ்வு கொடூரமாகிவிட்டது! தந்தையை தூக்கில் போட வேண்டும்!

கர்ப்பிணி அம்ருதா ஆவேசம்! அழகான வாழ்வு கொடூரமாகிவிட்டது! தந்தையை தூக்கில் போட வேண்டும்!

0
488

தெலுங்கானாவில் காதல் கணவரை கொலை செய்த தந்தை உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் அம்ருதா ஆவேசமாக கூறியுள்ளார்.

தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண்மணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்ருதாவின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கூலிப்படையை ஏவி பிரனய்குமாரை கொடூரமாக கொலை செய்துவிட்டார்.

இது தொடர்பாக மாருதிராவ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்ருதா, குற்றவாளிகள் அனைவரையும் தூக்கில் இடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குற்றவாளிகள் பிணையில் வெளிவர அனுமதி அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அம்ருதா அவர்களால் தமக்கும் தமது வயிற்றில் உள்ள சிசுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

கணவர் பிரனய் கொலைக்கு நீதிகேட்டு வரும் 23-ம் தேதி ஹைதராபாத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி பேரணி நடத்த முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, சாதிப் பாகுபாடு இல்லாமல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் கனவாக இருந்தது.

எனக்கு 21, பிரனய்க்கு 24 வயதுதான் ஆகிறது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பைத் தவிர இன்னும் வேறு எதையும் இந்த உலகத்தில் அனுபவிக்கவில்லை. எங்களின் அழகான வாழ்வு அதற்குள் கொடூரமாக முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

Previous articleஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்! வேலைக்காரன், ரெமோ வசூலை கூட தொடவில்லையா சீமராஜா?
Next articleவிக்னேஷ் சிவன்.. பிக்பாஸில் குழப்பத்தை ஏற்படுத்த! என்ன செய்தார் தெரியுமா?