கரையை கடக்கிறது ‘நிசர்கா’ புயல்..!

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழைக் காலத்தில்தான் பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகின்றன. இந்த ஆண்டு வழமையாக ஜூன் 1ம் திகதி தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
ஆனால் நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிட்டுள்ளனர். ‘நிசர்கா’ புயல் வடக்கு மகராக்ஷ்ரா -தெற்கு குஜராத் இடையே இன்று (புதன்கிழமை) மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களான குஜராத், மகராக்ஷ்ரா ஆகியமாவட்டங்கள் பாதிக்கப்படும் . இதில் மகராக்ஷ்ராதான் அதிகமாக பாதிக்கப்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
இதனால் இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
By: Tamilpiththan