இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்றைய தினம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை எதிர்பார்த்து ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கின்றது.
இந்த நிலையில் வடக்கின் முக்கிய அரசியல் புள்ளியான அனந்தி சசிதரன் மஹிந்தவுடன் இணைந்து சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் புதிய கட்சியை ஆரம்பித்தமைக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் தளத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வடகிழக்கு பெண்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. அனந்தி சசிதரனின் புதிய கட்சிக்கு எனது வாழ்த்துக்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
It is very good news to have woman leaders for north east. Best wishes @ananthysasi for your new party. We can work together with Hon @PresRajapaksa and @PodujanaParty to find solution for dissapeared people in Sri Lanka.
— Vinayagamoorthy Muralitharan (@ColKaruna) November 12, 2018