2020 ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு கவலைகள் தீரும் ஆண்டாக அமைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.
கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு 2020 ஆம் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டு. உங்க ராசி நாதன் புதனுக்கு உரிய நாளில் புத்தாண்டு பிறக்கிறது. உங்களுக்கு யோகமான நாளாக உள்ளது. பஞ்சமாதிபதி பஞ்சம ஸ்தானத்தில் இருப்பது யோகம். உங்க உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உங்க ராசி அதிபதி புதன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.
குழந்தை பாக்கியம்
புத்தாண்டு பிறக்கும் போது நான்காம் வீட்டில் ஐந்து கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளன. அற்புதமான வீடு,மனை அமையும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை தாம்பத்யத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு இது யோகமான கால கட்டம் நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள்.
புதிய பதவிகள் தேடி வரும்
பெண்களுக்கு மிகச்சிறந்த ஆண்டு. பெண்குழந்தை வேண்டும் என்பவர்களுக்கு அழகான குழந்தை பிறக்கும். பெண் தொழில் முனைவோர்களுக்கு ஏற்றமான ஆண்டு. புதிய பதவிகள் பெண்களுக்கு தேடி வரும். காரணம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்க்கிறார். புதிய வேலைகள் உங்களை தேடி வரும். கிடைக்கிற வேலைகளை பயன்படுத்திக்கங்க. நீங்க ஆரம்பிக்கிற பிசினஸ் நல்லதாக நடக்கும். அதுக்காக கடன் வாங்கி அகலக்கால் வைக்க வேண்டாம்.
கடன்கள் அடைபடும்
சனி ஐந்தாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு இரண்டாம் வீடான துலாம் ராசியை பார்க்கிறார். தன வரவு ரொம்ப அதிகமாக இருக்கும். நிறைய பணம் வரும் திடீர்னு புதையல் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு. போன காலங்களில் பட்ட கடன்களை எல்லாம் அடைப்பீர்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கன்னி ராசிக்காரர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
உடல் ஆரோக்கியம்
குரு நான்காம் வீட்டில் இருப்பதால் வெளி மாநிலம், வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு படிப்பு உயர்கல்வி யோகம் மாணவர்களுக்கு தேடி வரும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். நல்லா படிப்பீங்க. நீங்க விரும்பிய கோர்ஸ் படிப்பீங்க. இருந்தாலும் நீங்க ரொம்ப கவனமாக படிக்கணும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வயிறு பிரச்சினை இருந்து வந்தது அந்த பிரச்சினைகளை குருபகவான் காப்பாற்றுவார். நான்காம் வீட்டில் இருந்த சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினைகள் தீரும்.
பரிகாரங்கள்
ராகு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் வருகிறார்கள். இந்த வருஷம் உங்களுக்கு அனைத்து கிரகப்பெயர்சிகளும் நன்றாகவே இருக்கின்றன. திருமணம் போன்ற சுப காரியங்களில் தடைகள் தாண்டி நடைபெறும். எதையும் நிறுத்தி நிதானமாக யோசிங்க. சுய தொழில் வியாபாரம் செய்வர்கள் பண முதலீட்டில் பத்திரமாக இருங்க. லாபம் மெதுவாகத்தான் கிடைக்கும். கன்னி ராசிக்காரர்கள் திருக்குற்றாலநாதரை வணங்குங்கள் நல்லது தேடி வரும். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை தேடித்தரும். குல தெய்வ வழிபாடு செய்யாமல் எதை செய்தாலும் பலன்கள் கிடைக்காது.