எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில், பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலவும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் காண்பிக்கிறார்கள்.
இதில், அபர்ணதி தான் மக்கள் மனங்களில் முதல் இடத்தில் உள்ளார். இவர் ஆர்யாவை உண்மையாக காதலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கடந்த சில நாட்களாக வெளியான காணொளிகள் அபர்ணதியை ஆர்யா புறக்கணிப்பது போல காண்பிக்கப்படுகின்றது.
இதனால், அபர்ணதிக்கு ஆதரவு தெரிவித்து ”அபர்ணதி ஆர்மி” உருகியுள்ளது. இதில் அவருக்கு ஆதரவாக இளைஞர் யுவதிகள் குரல் கொடுத்துள்ளனர்.