ஒரு அடார் லவ் படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபை பார்த்து கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த காட்சி பிரபலமானதே தவிர படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ப்ரியாவின் நடிப்பு அந்த படத்தின் இயக்குநருக்கே பிடிக்கவில்லை.
எந்த நெட்டிசன்கள் ப்ரியாவை கொண்டாடினார்களோ அவர்களே படத்தை பார்த்த பிறகு அவரை கண்டமேனிக்கு கலாய்த்தனர். இருந்தாலும் அவரது அழகை எந்தவொருவரும் குறை சொல்லவில்லை.
இந்நிலையில் ஐதாராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இவரது மேக்கப் இல்லாத புகைப்படம் மொத்த ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளது.