கணவன் கண்முன்னே கள்ளக்காதலுடன் சுற்றிய மனைவி! கொந்தளித்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

0
328

திருச்சி அருகே சமயபுரத்தில் ஆனந்த் என்பவர் பிரபல ரவுடியாக இருந்துள்ளார். இவருக்கு விஜய் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை அறிந்த விஜய் தனது மனைவியையும், ஆனந்தையும் கடுமையாக கண்டித்துள்ளார்.

ஆனால், இருவரும் விஜயின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதேபோல நேற்று காலை விஜய் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அவரது மனைவியும், ஆனந்தும் பைக்கில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர், ஆத்திரமும், கோபமும் கொண்ட விஜய் ஒரு திட்டத்தை தீட்டினார். அதன்படி சமயபுரம் நால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே விரகு கடையில் ஆனந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அவரது தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனந்த் உறக்கத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Previous articleபொது இடத்தில் பிரபல நடிகர் செய்த மோசமான செயல்! நேரில் கண்ட போலீசார் என்ன செய்துள்ளார் தெரியுமா!
Next articleகோமா நிலைக்கு சென்ற ஸ்ரீதரன் எம்.பி!