கணவனை மரத்தில் கட்டி வைத்து அவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!

0
373

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரின் கண்முன்னே மனைவி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, சம்மந்தப்பட்ட பெண் பொய் புகார் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் சாலையில் நடந்து சென்றிருந்த போது 4 பேர் கொண்ட கும்பலால் வழிமறித்து தாக்குதலுக்குளாகியுள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் கணவரை மரத்தில் கட்டி வைத்து அடித்ததோடு, அவருடைய கண்முன்னே மனைவியை பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.

ஜனவரி 11ம் திகதி இந்த சம்பவம் நடந்திருந்ததாலும், தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. உடனே அந்த பெண் , நான்கு பேர் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் நான்கு இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயரதிகாரி, இணையத்தில் பரவிய வீடியோவினை அந்த பெண் தான் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் எனவும், அவர் துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Previous articleபரபரப்படையும் போராட்டக்களம்! களத்தில் குதித்த கருணா – வியாழேந்திரன்!
Next article100 கோடி வருமானம்! அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! எம்.எஸ். விஸ்வநாதன் மகள் நெகிழ்ச்சி!