கட்டுநாயக்கவில் சிக்கிய கோடிக்கணக்கான டொலர், யூரோ நாணயங்கள்!

0
349

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இந்த பணத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல முயற்சித்த நிலையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் டுபாய் நோக்கி செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இந்தியர் எனவும், மற்றைய நபர் இலங்கையர் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டு பணத்தில் அமெரிக்க டொலர் மற்றும் யூரோ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Previous article3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை விவகாரம்: பல நடிகைகள் சிக்கியது அம்பலம்!
Next articleயார் அந்த 19 பேர்? மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியல் தயார்!