ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்ப 250 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனையடுத்து வந்த ஆஸ்திரேலிய அணி வெறும் 242 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்திய அணி பந்து வீசியபோது இடைவேளையில் ரசிகர் ஒருவர் பலத்த பாதுகாப்பை தாண்டி ஆடுகளத்திற்குள் நுழைந்தார். தோனியின் ஜெர்சி எண்ணுடன் “தல” என பிரிண்ட் செய்யப்பட்டிருந்த டிஷர்ட்டை அணிந்திருந்த அந்த ரசிகர் தோனியை நோக்கி ஓடினார். அதனைக் கண்ட தோனி அந்த ரசிகரிடம் சிக்காமல் ஓடி விளையாடினார்.
Seen a lot out here..but still I don’t wanna miss this on my timeline…this is ?#Dhoni ❤️#INDvAUS pic.twitter.com/s1Zz6gZ4gg
— prudhvirajk (@rajvinay77) March 5, 2019
அந்த ரசிகரால் தோனியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
பின்னர் தோனி நின்று அந்த ரசிகரை கட்டியணைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோடு 15 முறை தோனியின் ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.