கொழும்பில் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு Braybrooke ப்லேஸ் பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.