உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா எளிதில் வீழ்த்திவிடும் என்று நினைத்த போது, கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்று, ஒரு வழியாக இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நபி, இந்திய அணிக்கு கடைசி வரை தொல்லை கொடுத்தார். இதனால் அவரின் விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவின் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவருக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற போது ஷமி வந்து வீசினார்.
Shami on hattrick#hattrick #INDvAFG pic.twitter.com/z1LytUBEMA
— Sanjib Kumar Bisoyi (@secret_sanju) June 23, 2019
அப்போது முதல் பந்தில் பவுண்டரி விரட்டிய நபியால் போட்டி இன்னும் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.
இரண்டாவது பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காமல், மூன்றாவது பந்தை ஸ்டிரைட் திசையில் அடித்து ஆட, பாண்ட்யா அற்புதமாக கேட்ச் பிடித்தார். அடுத்து வந்த வீரர்களை அடுத்தடுத்து ஷமி வீழ்த்தியதால், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இந்த ஹாட்ரிக் விக்கெட் மூலம் உலகக்கோப்பை அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
தவிர, உலகக்கோப்பை அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 10-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,