கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவை எடுத்த சிறுமி!

0
813

பொகவந்தலாவ, குயினா மேற்பிரிவு தோட்ட பகுதியில் சிறுமியொருவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய பரமநாதன் நித்தியா எனும் சிறுமியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் தன்னை திட்டியமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரமணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி!
Next articleதிருமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது!