கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அமுல்!

0
443

இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, 3000 ரூபா அறவிடப்பட்டு வந்தது. இந்தத் தொகையுடன் மேலும் 500 ரூபா சேர்க்கப்படுவதால் கடவுச்சீட்டின் கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

ஒரு நாள் சேவைக்காக இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு வந்தது. இச்சேவைக்கு மேலும் ஐயாயிரம் ரூபா சேர்க்கப்படுவதால், கடவுச்சீட்டின் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous articleவேகமாக அழிவடைந்து செல்லும் நிலையில் சிங்கள இனம்!
Next articleஅரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! மாதாந்த சம்பளம் கிடைக்குமா!