Home thatstamil one india tamil oneindia tamil Tamil News Today - Today News In Tamil - Tamil News Live கடன் தொல்லை தீர வேண்டுமா? சந்திரனை வழிபடுங்க!

கடன் தொல்லை தீர வேண்டுமா? சந்திரனை வழிபடுங்க!

0
177

கடன் தொல்லை தீர வேண்டுமா? சந்திரனை வழிபடுங்க!

ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கக்கூடிய இந்த நாளில் அம்பாள் வழிபாடு செய்வது நல்லது.

காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி அம்மனை வணங்கி இந்த பௌர்ணமி நாளை தொடங்க வேண்டும்.

விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில பரிகாரங்களை ஆடி மாத பெளர்ணமியன்று செய்வது வாழ்வில் வளங்களை சேர்க்கும்.

மாலை 6 மணிக்கு முன்பாக பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து தீபம் ஏற்றி குலதெய்வத்தையும், அம்பாளையும் வேண்டிக் கொண்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இருப்பவர்களுக்கு திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லை, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதில் தடை இருப்பவர்கள், சிவப்பு, பச்சை, மஞ்சள் இந்த மூன்று வண்ணங்களில் வளையல்களை அம்மன் பாதங்களில் வைத்து பூஜை செய்து தானமாக கொடுக்க வேண்டும்.

வளையல் தானம் சுப காரியத் தடையை நீக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் துயரங்களை போக்கி, செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழ்வதற்கு உண்டான வழியை வளையல் தானம் ஏற்பத்திக் கொடுக்கும்.

மாலை சந்திரம் உதயமான பின்பு, சுமார் ஏழு மணிக்கு ஒரு தாம்பூல தட்டில் ஒரு மஞ்சள் நிற துணியை விரித்து வைத்து விட்டு, அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1 கைப்பிடி கல் உப்பு, 1 ரூபாய் நாணயம், துளசி இலையை வைத்துவிட்டு கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

வேண்டுதலை முடித்துவிட்டு இந்த மஞ்சள் முடிச்சை ஒரு மூட்டையாக கட்டி அப்படியே நிலை வாசல் படியில் கொண்டு வந்து மாட்டி விடுங்கள். அடுத்த மாதம் பௌர்ணமி வரை அந்த முடிச்சு நிலை வாசலிலேயே இருக்கட்டும்.

அடுத்த மாதம் பௌர்ணமிக்கு முந்தைய நாள் இந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் பொருட்களை அகற்றிவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை கோவிலில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

கடன் பிரச்சனை தீரும் வரை மாதம் மாதம் பௌர்ணமி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கடன் சுமை குறைந்து கொண்டே வரும்.

சுலபமான இந்த பெளர்ணமி நாள் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் கடனை அடைக்க தேவையான வழியை சந்திர பகவான் காண்பித்துக் கொடுப்பார்.

ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று பிரபஞ்சமே நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும் நாளாகும். இன்று சகோதர சகோதரிகள் என்றும் ஒற்றுமையுடன் இருப்பதற்காக, ரக்‌ஷா பந்தன் என்ற ரக்‌ஷைக் கயிறை கட்டுவார்கள்.

Previous articleமற்றுமொரு பெட்ரோல் கப்பல் கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!
Next articleவிரைவில் ரணில் வீடு செல்வார்:பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவிப்பு!