Home thatstamil one india tamil oneindia tamil கஞ்சா போதையில் மகளிடம் தந்தை செய்த செயலலால்! ஆத்திரத்தில் அடித்து கொன்ற தாய்

கஞ்சா போதையில் மகளிடம் தந்தை செய்த செயலலால்! ஆத்திரத்தில் அடித்து கொன்ற தாய்

0
423

சென்னையில் கஞ்சா போதையில் பெற்ற மகளிடமே தகராறு செய்ததால் கட்டையால் கணவரை அடித்து கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்தனர்.

கோயம்பேட்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் வீட்டில் சுந்தர்ராஜன் மயங்கியதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிசார் சுந்தரராஜனின் உடலை பிரேத பரிசோதனை செய்த நிலையில் அவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து வள்ளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னிடமும், தன் மகளிடமும் சுந்தர்ராஜன் கஞ்சா போதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் கட்டையால் தாக்கி கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வள்ளியை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous article6 மாதம் முதல் 60 வயது வரை பளிச் பற்களுக்கு என்ன செய்ய வேண்டும்! வெண்மையான பற்களுக்கு!
Next articleஉனது அம்மாவை நானா மன்னிப்பு கேட்க சொன்னேன்! மீண்டும் வெடித்த சண்டை! பாலாஜி எடுத்த அதிரடி முடிவு..!