Home thatstamil one india tamil oneindia tamil ‘ஓ போடு’ நடிகையின் பரபரப்பு புகார்! பிரபல நடிகர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்!

‘ஓ போடு’ நடிகையின் பரபரப்பு புகார்! பிரபல நடிகர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்!

0
1010

நடிகர் சண்முகராஜன் பாலியல் தொல்லை கொடுத்தாக நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான சண்முகராஜன் தனக்கு படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னையும் தனது கணவரையும் தாக்கியதாகவும், சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாட்டாமை டீச்சர்
மேலும் தனியார் தொலைக்காட்சியின் சீரியல் படப்பிடிப்பில் ஓ போடு பாடல் புகழ் நடிகை ராணியும், சண்முகராஜனும் கணவன் மனைவியாக நடித்து வந்தனர்.

Metoo விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல் கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்திலும் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனமாடியவருமான நடிகை ராணி காவல் நிலையத்தில் துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்தார்
ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றதும் எனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். என் கணவர் இதை தட்டிக் கேட்டபோது சண்முகராஜன் என்னை தாக்கினார் என ராணி புகார் அளித்துள்ளார்.

மேலும் படப்பிடிப்பு சமயங்களில் சண்முகராஜன் தன்னுடன் உணவருந்த வருமாறும் தனியாக தங்க அழைத்ததாகவும் அந்த நடிகை பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

இதனிடையே புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleசெல்பி எடுக்க போய் பரிதாபம்! 27-வது மாடியில் இருந்து விழுந்த பெண்!
Next articleவைரமுத்துவின் மனைவி சின்மயி விவகாரம் குறித்து கூறியது என்ன?