ஓ.டி. டி தளத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ -ரிலீஸ்… எப்போது?
பொன்மகள் வந்தாள் திரைப்படம் மார்ச் 27- ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவினால் திஜேட்டர்கள் அனைத்தும் முடங்கியுள்ளதால் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அமேசான் பிரைம் சமீபத்தில் கைப்பற்றியது. இப்படம் வரும் மே 29 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குனர் ஜே.ஜே. பிரிட்டோ இயக்கத்தில் சூர்யாவினுடைய 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதே போல் ரிலீசுக்குத் தயாராகவுள்ள படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் நேரடி டிஜிட்டல் ரிலீசுக்காகக் கைப்பற்றி வருகின்றன, என்பதும் குறிப்பிடத்தக்கது.
By: Tamilpiththan