பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோர் பங்கேற்றனர். ஆரவ்வை காதலிப்பதாக நடிகை ஓவியா வெளிப்படையாகவே கூறினார்.
அதை அவர் ஏற்றுக்கொள்ளாததால் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வருத்தத்துடன் வெளியேறினார். அதன் பின் ஆரவ் இறுதிவரை இருந்து வெற்றியாளரானார். நிகழ்ச்சி முடிந்தது பின்னர் ஓவியா-ஆரவ் இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். ஆரவ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் “இப்போது இந்த வருடம் அமைதியாக முடியும் என நம்புகிறேன்” என கூறி லவ் ஸ்மைலி பதிவிட்டுள்ளார். மேலும் #Araviya என இரண்டு பேரின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இருவரும் காதலை உறுதி செய்துள்ளார்களோ எங்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: