ஓடும் ரயிலில் பெண் பாலியல் பலாத்காரம்: காப்பாற்றாமல் பயணிகள் செய்த இழிசெயல்!

0

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எஞ்சிய பயணிகள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் கல்யான் மற்றும் தாதர் பகுதிகளுக்கு இடையே செல்லும் ரயில்லில் தான் நேற்றிரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு 11 மணியளவில் அதிக கூட்டம் இல்லாத நிலையில் இளைஞர் ஒருவர் தனது அருகில்இருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திடீரென்று அந்த பெண்ணை தாக்கிய அவர், அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார்.

மட்டுமின்றி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். இந்த களேபரங்களை பார்த்துக் கொண்டிருந்த எஞ்சிய பயணிகள் குறித்த பெண்மணியை காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

மட்டுமின்றி அதில் சிலர் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக பதிவு செய்வதில் முனைப்பு காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தாதர் ரயில் நிலையம் வந்ததும் பயணிகளில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், பொலிசார் அவரை கைது செய்தனர்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த நபர் பெருமளவு பணம் தர வேண்டும் எனவும், இந்த பண விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே, பாலியல் பலாத்காரத்திற்கும் கொலை முயற்சிக்கும் இட்டுச் சென்றுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Previous articleமகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டோனி: வைரலாகும் வீடியோ!
Next articleகாதல் மனைவியை ஆபாச படம் பார்க்க வைத்து சித்திரவதை: கணவன் மீது புகார்!