ஓடி ஓடி உயிரை காப்பாற்றுபவருடைய உயிர் பரிதாபமாக பறிபோன சம்பவம்!

0
341

அம்பாறை சியம்பாண்டுவ 18 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வடினாகல பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வாகனம் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது நோயாளர் காவு வாகனத்தை செலுத்திய சாரதி படுகாயங்களுடன் வடினாகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நோயாளர் காவு வண்டியில் பயணித்த உதவியாளர் ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் 17 தமிழர்கள் அதிரடியாக கைது!
Next articleமெகசின் சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ச!