ஒரே போடாக போட்டு உடைத்த இயக்குனர் கௌதம் மேனன், நீண்ட நாள் கழித்து!
நடிகர் விஜய் இயக்குனர்கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகவிருந்த யோஹான் அத்தியாயம் ஒன்று திரைப்படம் பூஜை போட்டு ஃபர்ஸ்ட் லுக் போட்டோ ஷூட் நடந்ததோடு சரி. படம் ட்ராப் ஆகிவிட்டது.
இதுக்கு என்ன காரணமாக இருக்கும்..? என்று யோசிக்க ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய். இப்போது, தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படம் ட்ராப் ஆனது ஏன் என்பது குறித்து, பேட்டி ஒன்றில் சூசமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் கூறியதாவது, எனக்கும் விஜய்யை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய படங்களை பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்.நான் இயக்கம் படங்களில் அதிகம் செலவு வைக்க மாட்டேன். இப்போது என்கிட்ட ஒரு ஸ்டோரி இருக்குன்னா.. அந்த ஸ்டோரிக்கு ஹீரோ நடிக்கணும்.
ஆனால், அந்த ஹீரோவுக்கு என்ன செட் ஆகும்னு ஸ்டோரி ரெடி பண்ணா அது சரியா வராது. அதனால், ஸ்டோரிகுள்ள ஹீரோ நடிச்சா அது தப்பா போக வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
அவர் 80 கோடி , 100 கோடி என செலவு செய்து எடுக்கும் படங்களை என்னால் வெறும் 30 கோடியில் எடுக்க முடியும். என் மீது நம்பிக்கை வைத்து அவர் வந்தால் அன்னிக்கு தான் தீபாவளி என்று கூறியுள்ளார்.