ஒரே நாளில் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது!

0
510

ஒரே நாளில் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது!

ஜெர்மனியின் பிரபல விமான நிறுவனமான லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக லூப்தான்ஸா நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதனால் நேற்றையதினம் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது.

அந்தவகையில் பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்ததோடு, முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டன.

இதனால் லூப்தான்ஸா நிறுவன விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆச்சரியப்படுத்தும் வீடியோ! 100 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கிய கப்பல் தற்போது வெளியே வந்த அதிசயம்!
Next articleடிஎன்ஏ சோதனையில் தெரிந்த உண்மை, முதல் குழந்தை பிறந்த அடுத்த 4 வாரத்தில் மீண்டும் தந்தையான பெரும் கோடீஸ்வரர்?