ஒரே ஒரு கோழி முட்டையின் புகைப்படம் சமூக வலைதளவாசிகள் அனைவரையும் திணறடிக்க செய்துள்ளது. அப்படி அந்த புகைப்படத்தில் என்ன தான் இருக்கிறது.
ஒரு பெரிய பணக்காரரால் அந்த முட்டை ஏலம் எடுக்கப்பட்டதா? வைரக்கல் எதுவும் உள்ளதா? அல்லது கதைகளில் வருவது போல் அது தங்க முட்டையா?
என்னதான் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறது என்று பலரும் முடியைப் பிக்காத குறைதான்! ஒண்ணுமில்லைங்க… அது ஒரு முட்டை. டாட்.
கடந்த ஜனவரி 4-ம் தேதி ’world record egg’ என்ற ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முட்டையின் புகைப்படம் பதியப்பட்டது. யார் எடுத்தப் புகைப்படம் எதற்காக இப்புகைப்படம் பதியப்பட்டது என எந்தத் தகவலும் இல்லை. அந்த இன்ஸ்டா போஸ்டில் ‘நடிகை கெய்லி ஜென்னர் பெற்ற 18 மில்லியன் லைக்ஸ் இதுவரையில் உலக சாதனை ஆக இன்ஸ்டாகிரமில் உள்ளது. இதை முறியடிக்க இந்த முட்டைக்கு லைக் செய்யுங்கள்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவ்வளவுதான்…25 மில்லியன் லைக்ஸ் உடன் உலக சாதனை படைத்துள்ளது இந்த இன்ஸ்டாகிராம் ‘முட்டை’ சமூக வலைதள சூறாவளியாக வலம் வருகிறது.