ஆந்திர மாநிலத்தில் 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை சண்டையின் காரணமாக நபர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள ரயில்வே கோட்டூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்.
இவர் டைல்ஸ் வியாபரியான இவர், தனக்கு சொந்தமான 60லட்சம் மதிப்புள்ள நான்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சேகர் வீட்டின் அருகே இருந்த காலி இடம் ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் வெங்ககடரமணராஜூ என்பவர் வாங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தான் வாங்கிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக வெங்ககடரமணராஜூ 20 அடி வரை பள்ளம் தோண்டியுள்ளார்.
இதனால் அருகில் இருந்த சேகரின் வீடு ஆட்டம் கண்டுள்ளது.
இதனால், பதறிப்போன சேகர் தனது வீட்டில் வசிக்க முடியாமல் வாடகை வீட்டில் குடியேறினார்.
இதுமட்டுமல்லாது, வெங்கடரமணராஜூவிடம் கடுமையாக சண்டையிட்டுள்ளார்.
இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த வெங்கடரமணராஜூ சேகரின் 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை 1 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
அதோடு, சேகர் மீதான கோபத்தில் வாங்கிய வீட்டை கண் முன்பாகவே பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளார்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.