ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்! இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகிள்ளதாக ஐரோப்பா ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கையின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் உட்பட ஏனைய சர்வதேச பங்காளர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து தீர்வு ஒன்றை உடனடியாக கண்டுபிடிப்பதற்கு அவசியமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் நன்மை கருதி நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். அதற்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என ஐரோப்பா ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆட்டங்காணும் ஹோட்டல்கள்! மஹிந்தவின் வருகையால்!
Next articleஎச்சரிக்கும் அமெரிக்கா! இலங்கையில் இன்று வன்முறை வெடிக்கும்!