எப்படியிருந்த நாடு இப்போ எந்தமாதிரி மாறிருக்குனு நீங்களே பாருங்க! நம்பமுடியாத புகைப்படங்கள்!

0
384

நாளுக்கு நாள் ஒவ்வொரு ஊரும், நாடும் சில மாற்றங்களைச் சந்திக்கும். அதற்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல், இயற்கை மாற்றங்கள் ஆகியவை காரணிகளாக அமையும். ஆனாலும் அங்குள்ள சில புராதன சின்னங்கள், இடங்களில் மாற்றங்கள் இருப்பதில்லை.

இருந்தாலும் நாம் கண்பிடிக்கும் வகையில் தான் இருக்கும். ஆனால் அப்படி நம்மால் கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் மாறியிருக்கிற நகரங்கள் பற்றி தான் நாம் பேச வேண்டியிருக்கிறது.

துபாய்
இந்த முதல் படத்தில் இருப்பது துபாய் நகரம் ஆரம்ப காலத்தில் இருந்த புகைப்படம். இதில் பார்த்தால் வெறுமனே சில விசைப்படகுகளும் சின்ன சின்ன துடுப்புப் படகுகளும் தான். தொழில் வளர்ச்சி அதிகரித்த பின், இப்போது இந்த நகரம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இரண்டாவது படத்தில் இருக்கக்கூடியது தான் தற்போதைய துபாய் நகரம்.

வெனிடா
இதில் முதல் படத்தில் இருக்கும் வெனிடா நகரம் கிட்டதட்ட 1937 ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் தற்போது இந்த நகரம் எப்படி வண்ணமயமாக மாறியிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா? நம்ப முடிகிறதா ஆனால் அது தான் உண்மை. இரண்டாவது படத்தில் இருப்பது தான் அந்த நகரத்தின் தற்போதைய படம்.

மாஸ்கோ
இதுதான் உலகின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான மாஸ்கோ நகரின் பழைய புகைப்படமும் அதில் இரண்டாவதாக இருப்பது தற்போதைய புகைப்படம் ஆகும். இதில் இரண்டு புகைப்படங்களிலும் அவ்வளவு பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்று தான் தோன்றுகிறது. ஆனால் நதிக்கரையில் கப்பல் போக்குவரத்து போன்ற பொருளாதார ரீதியான மாற்றங்களை நம்மால் உணர முடிகிறது.

ஹைதராபாத்
கடந்த 1880 ஆம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட ஹைதராபாத்தின் புகைப்படம் தான் இந்த முதல் புகைப்படம். ஆனால் அதே இடம் இந்த இரண்டாம் புகைப்படத்தில் இருக்கும் தற்போதைய ஹைதராபாத் நகரத்தையும் பாருங்கள். இரண்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அளவுக்கு இந்த நகரம் வளர்ந்திருக்கிறது.

சிகாகோ
சிகாகோ நகரம் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது விவேகானந்தர் அங்கு ஆற்றிய உரை தான். அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த முதல் புகைப்படத்தில் இருந்த 1838 கால கட்ட சிகாகோ நகரையும் பாருங்கள். இரண்டாவது படத்தில் இருக்கும் தற்போதைய சிகாகோ நகரத்தையும் பாருங்கள். ஏதாவது உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா?

ஷாங்காய்
இது உண்மையிலேயே கண்டுபிடிக்க முடீயாத கற்பனை கூட செய்து பார்க்க முடீயாத மாற்றம் தான். முதல் படத்தில் இருப்பது ஷாங்காய் நகரில் 1920 களில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆனால் இந்த இரண்டாவது படத்தைப் பாருங்கள். இது தான் தற்போதைய ஷாங்காய் நகரம். மயங்கி எங்கேயாவது விழுந்திடாதீங்க. இவ்ளோ தண்ணியில கண்டுபிடிக்க முடியாது.

பேங்காக்
1822 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பேங்காக்கின் புகைப்படம் தான் இது. ஆனால் இன்று அதனுடைய பிரம்மாண்ட வளர்ச்சியை கற்பனையால் கூட நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாகரீக கலாச்சார பொருளாதார மாற்றங்களால் நகரங்களும் நாளுக்கு நாள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டே தான் இருக்கின்றன.

Previous articleபெண்களை சீரழித்த மகனை காப்பாற்ற வாதாடும் தாய்! பொதுமக்களிடமிருந்து தப்பிய காட்சி!
Next articleகருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க நினைத்த பெண்ணிற்கு அரங்கேறிய கொடுமை!