எந்த நாட்டில் இருக்கிறார்? நித்தியானந்தாவை பற்றி வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!
சிறுமிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நித்தியானந்தா இதுவரை எந்த ஒரு தெளிவான பதிலும் கொடுக்காமல் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரைப் பற்றி சில அதிர்ச்சி தகவலகள் வெளியாகியுள்ளன. இதனால் ஊடகங்களில் நித்தியானந்தாவின் செய்தி தலைப்பு செய்தியாக மாறியது, இந்த ஜனார்த்தன சர்மா யார்? நித்தியானந்தாவுக்கும் இவருக்கும் சம்பந்தம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்த தகவலும், நித்தியானந்தாவின் மேல் என்னென்ன வழக்குகள் உள்ளன, அவர் இனி இந்தியா பக்கமே வரமுடியாது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. நித்தியானந்தாவின் தீவிர பக்தரான இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூருவில் இருக்கும் பிடதி என்கிற இடத்தில் இயங்கும் குருகுல பள்ளியில் தன்னுடைய நான்கு (3 பெண் குழந்தை, 1 ஆண் குழந்தை)குழந்தைகளையும் சேர்க்கிறார்.
ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு நித்தியானந்தாவுக்கும், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நித்தியானந்தா குழந்தை பிடித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய குழந்தைகளை மீட்க போராடிய ஜனார்த்தன சர்மா சிறு வயதுடைய ஒரு பெண்ணையும் ஆண் குழந்தையையும் மீட்டுக் கொண்டு வந்தார். இளம் பெண்களான லோபமுத்ரா சர்மா ( 21), நந்திதா சர்மா (வயது 18) ஆகியோரை நித்தியாந்தா திருப்பி அனுப்பவில்லை. இதையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளிடம் கேட்ட போது, நித்தியாந்தாவின் பள்ளியில் பாடங்கள் எடுப்பதில்லை. ஆசிரம பொருட்களை விற்று காசு கொண்டு வர சொல்வார்கள்.
விற்பனை குறைந்து காசு குறைந்தால் எங்களை அடிப்பார்கள். சாப்பாடு போட மாட்டார்கள். அப்பா எங்களைப் பார்க்க வந்தால் விடமாட்டார்கள். அப்பா ஆசிரமவாசிகளிடம் சண்டை போட்டதால் பள்ளியை நிர்வகிக்கும் நித்தியாந்தாவின் பெண் சிஷ்யைகளான சாத்வி பிரான் பிரியானந்தா, பிரியாத்வா ரித்திகரன் ஆகியோர் அவர்கள் நிர்வகிக்கும் குருகுலத்துக்கு அழைத்துச் சென்றார்கள். குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்கிற பள்ளி வளாகத்தில் இயங்கும் குருகுல பள்ளிக்கு அனுப்பினார்கள். அப்பா அதி தீவிரமாக எங்களை குஜராத்திற்கு வந்து தேடினார். அப்போது நாங்கள் அப்பா பார்வையில் நாங்கள் படாமலிருக்க எங்களை ஒரு குடியிருப்பில் உணவு இல்லாமல் அடைத்து வைத்தார்கள் என்று கூறியிருந்தனர்.
குழந்தைகளின் நிலையே இப்படி என்றால், இளம் பெண்களின் நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, அவரின் மூத்த மகளான லோபமுத்ரா பேசும் வீடியோ ஒன்றை நித்தியானந்தா அனுப்பினார். அதில், நான் இப்பொழுது நித்யானந்தாவுடன் மேற்கத்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட்டில் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். நீங்கள் எனக்கு அப்பா இல்லை. நான் 21 வயது மேஜராகிவிட்டேன். நான் உங்கள் வீட்டில் இருந்தபோது உங்கள் நண்பர் ஒருவருடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தினீர்கள். அதனால் நித்தியாந்தாவுடன் இணைந்தேன். என்னை சுவாமி நித்தியாந்தாவிடம் இருந்து பிரிக்காதீர்கள் என்று கூறியிருந்தார்.
அந்த வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாக, ஜனார்த்தனன் குஜராத் பொலிசில் புகார் அளித்தார். நித்யானந்தாவிற்கும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான பிரபல சாமியார்களுக்கும் ஒத்து வராது. இதனால் இந்த வழக்கு குஜராத்திற்கு வந்தவுடன் அவர்கள் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர் சாமியர் என்ற போர்வையில் பல தவறுகள் செய்து வருவதாகவும், நித்தியானந்தா இவர்களை கிண்டல் செய்யும் படியும் பேசியிருந்தார். இதனால் நித்தியாந்தாவின் குஜராத் குருகுலத்தை நடத்தி வரும் சாத்வி பிரான் பிரியானந்தா, பிரியாத்வா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மேல் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எல்லா முதல் குற்றவாளி நித்தியானந்தா என்று கூறப்படுகிறது.
PTI
மேலும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான பிரபல சாமியார்களின் அழுத்தம், தென் இந்தியாவை விட்டுவிட்டு இப்போது குஜராத்திலும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாரா? என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கோபமடைந்து உடனடியாக விசாரணைக் கமிட்டியை அழைத்து விசாரிக்க அகமதாபாத் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நித்தியானந்தா நடத்தும் இந்த குருகுல பள்ளி சட்டவிரோதம் என கர்நாடகா அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இது சட்ட விரோதம் என்று கூறி, கடந்த 2016-ஆம் ஆண்டு குருகுல பள்ளியை பூட்டி சீல் வைக்க கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த சிறுமிகள் கடத்தல் விவகாரம் பரப்பாக பேசப்படும் நிலையில், நித்யானந்தா தனது ஆண் பக்தர் ஒருவரிடமும் பெண் பக்தை ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டார் என ஒரு கற்பழிப்பு வழக்கு பல வருடங்களாக நடந்து வருகிறது. அதில் கடந்த ஒரு வருடமாக நித்தியானந்தா ஆஜராகவே இல்லை. வருகிற டிசம்பர் 9-ஆம் திகதி மறுபடியும் குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. குஜராத்தில் நடைபெற்ற சம்பவம் இந்த வழக்கில் எதிரொலித்தால் நிச்சயமாக கைது வாரண்டை, கற்பழிப்பு வழக்கு நடக்கும் கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமா? நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சங்கீதா என்ற பெண் மர்மமான முறையில் இறந்தார். அந்த வழக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்திய அரசின் அமலாக்கத்துறை ஒரு மோசடி வழக்கை நித்தியானந்தா மீது கொடுத்துள்ளது. அந்த வழக்கு தற்போது வரை விசாரணைக்கு வரவில்லை. தமிழகத்தில் திருவண்ணாமலையில் 1008 லிங்கங்களை வைத்து கிரிவல பாதையில் நித்தியாந்தா ஆசிரமம் அமைத்தார். அப்போது முதல்வராக இருந்த இறந்த முதல்வர் ஜெயலலிதா அதை சட்ட விரோத ஆக்கிரமிப்பு என இந்து சமய அறநிலையத்துறை மூலம் இழுத்து மூடினார்.
அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள நீதி மன்றங்களில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்குகள் இருப்பதாக அவருக்கு எதிராக போராடுபவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு வழக்குகள் கொண்ட நித்தியானந்தா இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, பொலிசார் அவரை தேடி வருகின்றனர். ஆனால் நித்தியானந்தா தெற்கு அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அங்கே நிரந்தமாக தங்கிவிட்டதாக அவரின் தீவிர பக்தர்கள் சவால்விடுவதாகவும், நித்தியானந்தாவை பொறுத்தவரை அவரின் ஆட்டம் இந்தியாவில் முடிந்துவிட்டது என்றும் வழக்கு விசாரணையில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.