அடுத்த ஆண்டு கடன் தவணை மற்றும் வட்டியாக ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணத்தை இலங்கை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக கடனை செலுத்தும் தொகையானது ட்ரில்லியன் ரூபாவுக்கு மேல் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால கணக்கறிக்கையை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு 7.4 வீதம் என்ற அதிக வட்டியின் கீழ் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியன் டொலர் கடனை 2020 ஆம் ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டும்.
2030ஆம் ஆண்டளவில் இலங்கையை, கடன் சுமை குறைந்த நாடாக மாற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதிகமான தொகையை கடனாக செலுத்த வேண்டிய காரணத்தினால், கனவு கண்ட அபிவிருத்தியை அடைய முடியவில்லை.
எனினும் அந்த சவாலுக்கு மத்தியிலும் அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர்கள் சம்பளம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.