எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும்? மஹிந்த அணியின் தகவல்!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பலர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இழந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் கட்சித் தலைவர் பதவியை என்பவற்றையும் ரணில் இழப்பார்.

ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை அனுமதிக்காத ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

இவ்வாறு இணைந்து கொள்வோருக்கு விசேட வரப்பிரசாதங்களோ அல்லது அமைச்சுப் பதவிகளோ வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅலரி மாளிகையை விட்டு வெளியேறும் ரணில்! கோத்தபாய கொடுத்த உறுதிமொழி!
Next articleஅதிரடி திருப்பங்களோடு காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்! அமெரிக்காவின் ஆதரவோடு கூட்டமைப்பு!