எண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்–ஹெல்த் ஸ்பெஷல்!

0
688

எண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்–ஹெல்த் ஸ்பெஷல்
என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா? உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு “பேக்”……
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம்…. இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
எண்ணெய் வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பரு தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலை பருப்பில் அட்டகாசமான சிகிச்சை இருக்கிறது.

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச வேண்டும்.

தொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்…. பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

Previous articleத‌க்கா‌ளியு‌ம் சரும அழகும்!
Next articleகோவிலில் யானை சிலைக்குள் மாட்டிக்கொண்ட பெண்! கடைசியில் என்ன செய்தார்னு தெரியுமா!